ஓசூர்
ஓசூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிப்காட் பகுதியில் உள்ள கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் குட்கா பதுக்கி விற்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் ஜெய்னூல் இஸ்லாம் (வயது22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.