திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-25 21:00 GMT

திண்டுக்கல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா, இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பட்டிவீரன்பட்டியை அடுத்த நெல்லூர் தேவர் திருநகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்