பிளேடால் வெட்டிய வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன மேலாளரை பிளேடால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா பிக்கனப்பள்ளி அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 32). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்திற்கும், அப்பகுதியை சேர்ந்த மதுக்குமார் (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாதேசை, மதுக்குமார் தகாத வார்த்தையால் திட்டி பிளேடால் வெட்டினார். இதில் காயமடைந்த மாதேஷ் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்குமாரை கைது செய்தனர்.