கஞ்சா விற்ற வாலிபர் கைது
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை பகுதியில் வேப்பனப்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் சென்றபோது வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தடத்தாரை கிராமத்தை சேர்ந்த பேட்டப்பா மகன் ராகுல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.