கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது
பர்கூர் பகுதியில் கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பர்கூர்
பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தனர். கடையில் 8 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, பான்பராக், குட்கா ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பர்கூர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்த நாராயணராம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் 3 கிலோ குட்கா பதுக்கியது தெரிந்தது. இதுதொடர்பாக ஜெகதேவி சாலையை சேர்ந்த குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 11 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.