கஞ்சா வைத்திருந்தவர் கைது
ஓசூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
ஓசூர்
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் காந்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் 120 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஓசூர் தொரப்பள்ளி காந்தி நகரை சேர்ந்த மனோஜ்குமார் (வயது23) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.