வேடசந்தூர் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
வேடசந்தூர் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக பஸ் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த பஸ்சில் பயணிகள் சிலர் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர், ஒரு பயணியின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.500ஐ நைசாக திருடினார். இதில், சுதாரித்துக்கொண்ட அந்த பயணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜேப்படி செய்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அந்த வாலிபர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் வேடசந்தூர் ஆத்துமேடு, அய்யனார் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.