சிறுமியை பலாத்காரம்; தந்தை உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-31 17:06 GMT

திண்டுக்கல்லில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் நாகல்நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 50), முகமதுரபீக் (59) மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 3 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்