போடியில் பிரபல ரவுடி கைது

போடியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-12 17:16 GMT

தேனி மாவட்டம் போடியில், தேவாரம் சாலையில் இட்லி கடை வைத்து நடத்தி வருபவர் கர்ணன் (வயது 49). இவரது பட்டறைக்கு நேற்று காலை போடியை சேர்ந்த சின்னபாண்டி என்ற அட்டாக் பாண்டி (42) வந்தார். அப்போது கர்ணனிடம் பணம் கேட்டு அவர் மிரட்டினார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அட்டாக் பாண்டி, தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்து விடுவதாக அவரை மிரட்டினார். இதனால் கர்ணன் அபயகுரல் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கர்ணனின் கடைக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அட்டாக் பாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து போடி டவுன் போலீசாருக்கு கர்ணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தப்பி ஓடிய அட்டாக் பாண்டியை தேடினர். அப்போது நகர் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அட்டாக் பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி மீது மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்