செவிலியருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
தர்மபுரி அருகே செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தர்மபுரி அருகே உள்ள கொளகத்தூரை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர் பழைய தர்மபுரி அரசு துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கே.என்.சவுளூர் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அந்த கருவிகளை கோணங்கிநாயக்கனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்க சென்றார். அப்போது அவரை விநாயகம் (28) என்ற வாலிபர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர்.