வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-24 16:59 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமி பலாத்காரம்

பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 30). இவர், கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாயார் சிறுமியை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்ேபரில் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்த கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதனையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அதற்கான உத்தரவை சிறையில் உள்ள ஜெயக்குமாரிடம் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்