தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தர்மபுரி அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போக்சோ வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 17:44 GMT

தர்மபுரி அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போக்சோ வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண் தற்கொலை

தர்மபுரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் வீட்டின் அருகே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த இளம் பெண் உயிரிழந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

தொழிலாளி கைது

இந்த விசாரணையின்போது முனிரத்தினம் (வயது 26) என்ற தொழிலாளி அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முனிரத்தினம் மீது போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்