பள்ளிபாளையத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேர் கைது

பள்ளிபாளையத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேர் கைது

Update: 2022-07-24 16:06 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பாலம் கட்டும் ஒப்பந்ததாரர் அலுவலகம் உள்ளது. அங்கு பாலம் கட்டும் பணிக்கான இரும்பு, சிமெண்டு ராடுகள், மோட்டார்கள் இருந்தன. இந்த அலுவலகத்தின் மேலாளராக விஜய் (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் பள்ளிபாளையம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அலுவலகத்தில் இருந்த பழைய தகரம், இரும்பு ராடுகள், மோட்டார்களை திருட்டு போனதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இரும்பு பொருட்களை திருடியதாக அங்கு வேலை செய்யும் டிரைவர்களான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த குட்டிதுரை (34), மயிலாடுதுறையை சேர்ந்த தனசேகரன் (24), திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் (26), நாகப்பட்டினத்தை சேர்ந்த கனிவண்ணன் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்