பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 16:29 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் சத்தியவாணி (வயது 33). இவர் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது தனது தங்க நகைகளை ஒரு சிறிய பையில் வைத்திருந்தார். அப்போது ஒரு வாலிபர் சத்தியவாணியின் கையில் இருந்த நகை பையை பறித்து கொண்டு ஓடினார். அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். ேபாலீசாா் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இம்மானியல் (23) என தெரியவந்தது. இவருக்கு பல்வேறு செல்போன் திருட்டுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இம்மானியலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்