உத்தனப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
உத்தனப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி போலீசார் அலேசீபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பூவரசம்பட்டியை சேர்ந்த செல்வன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.