வீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது

வாழப்பாடி அருகே வீட்டில் மது பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-05 18:17 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே வி.மன்னார்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39), கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் அரசு அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சீனிவாசனின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ததோடு, சீனிவாசனையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்