போச்சம்பள்ளி அருகேமாங்கூழ் தொழிற்சாலையில் மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது
மத்தூர்
போச்சம்பள்ளி அருகில் உள்ள பி.திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவர் மாங்கூழ் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் இருந்த மின் மோட்டார்கள் திருட்டு போனது. இது குறித்து தனபால் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அங்கம்பட்டியை சேர்ந்த அருண் (வயது33), இவரது நண்பர் சரக்கு வேன் டிரைவர் ரகு (24) ஆகிய 2 பேரும் மின் மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மின்மோட்டார், திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.