சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி கைது

சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்டதாக பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-07 21:00 GMT

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகர பொதுச்செயலாளராக இருப்பவர் அறிவழகன் (வயது 37). கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கம்பம்மெட்டு அருகே தமிழக ஜீப் டிரைவர் தாக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து தமிழக ஜீப் டிரைவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு வரக்கூடிய கேரள மாநில பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களையும் சேதப்படுத்த வேண்டும் என்றும் பேசி அறிவழகன் ஆடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமாக சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்டதாக அறிவழகனை கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ைகது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்