ஓசூரில்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது

Update: 2023-07-23 19:45 GMT

ஓசூர்

ஓசூர் பாகலூர் சாலை என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி 2-வது கிராஸ் பகுதியில் ஒரு வீட்டிற்கு ஆண்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த கவிதா (வயது 30), ஓசூர் என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனியை சேர்ந்த ஹரிதாஸ் (21), உடையாண்டஅள்ளியை சேர்ந்த சிக்கம்மாள் என்கிற லதா (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே போல ஓசூர் காந்தி நகரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த பேரிகை அத்திமுகத்தை சேர்ந்த தினேஷ் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்