கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு
கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது
இளையான்குடியை அடுத்துள்ள சேதாம்பல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாத்தாள். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி தன்னுடைய ஒரு வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக அப்போதைய இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கண்ணாத்தாள் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இது தொடர்பான விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆஜராகவில்லையாம். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி ஆஜர்படுத்த விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். தற்போது ரமேஷ் பதவி உயர்வு பெற்று மதுரையில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார்.