நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்- செங்கல்பட்டு கோர்ட் உத்தரவு

கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு யாஷிகா ஆனந்த் காரில் வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.;

Update:2023-03-23 16:21 IST

செங்கல்பட்டு

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு யாஷிகா ஆனந்த் காரில் வந்து கொண்டிருந்தார்.

அவரது கார் மாமல்லபுரம் அருகே வந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 21 ஆஜராக யாஷிகா ஆனந்திற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், யாஷிகா ஆனந்த் ஆஜராகவில்லை. இதனால், யாஷிகா ஆனந்திற்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்