பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு

சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன.

Update: 2023-09-26 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, திட்டை ரோடு, அகர திருக்கோலக்கா தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, மேல மாரியம்மன் கோவில் தெரு, ஈசானிய தெரு, இரணியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் மாவட்ட நிர்வாக ஒப்புதலோடு நேற்று நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பன்றி பிடிப்பவர்கள் சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை போலீஸ் பாதுகாப்போடு பிடித்து அப்புறப்படுத்தினர். சீர்காழி நகர் பகுதியில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திய நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்