கடனை திருப்பி கொடுக்காதவர் கைது

முத்துப்பேட்டையில் கடனை திருப்பி கொடுக்காதவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-11-20 18:45 GMT

முத்துப்பேட்டை,:

முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் ஹலீது (வயது48).இவர் காரைக்காலை சேர்ந்த ஹாஜா அபூபக்கர் (42) என்பவரிடம் ஒரு லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் நீண்டகாலமாகியும் ஹாஜா அபூபக்கர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து ஹலீது முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜா அபூபக்கரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்