மது விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
மாரண்டஅள்ளி பகுதியில் மது விற்ற பெட்டிக்கடைக்கார் கைது செய்யப்பட்டார்.;
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கனவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரரிடம் விசாரித்ததில் அவர் நடுபையன் (வயது 60) என்பதும் மது பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.