வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே ஆந்திரா மாநில எல்லையில் உள்ள சின்ன கொட்டமாகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவப்பா நாயுடு (வயது 55). இவர் வேப்பனப்பள்ளியில் சாராயம் விற்பனை செய்வதாக வேப்பனப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வேப்பனப்பள்ளியில் சோதனை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் சாராயத்தை பாக்கெட்டுகள் மூலம் தேவப்பா நாயுடு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவப்பா நாயுடுவை ைகது செய்ததுடன், ஒரு லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.