சேந்தமங்கலம் அருகே மாந்தோப்பில் சாராய ஊறல்; தொழிலாளி கைது

சேந்தமங்கலம் அருகே மாந்தோப்பில் சாராய ஊறல் போட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-20 18:45 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பேரூராட்சி அரசு தாலுகா ஆஸ்பத்திரி எதிரில் வசித்து வருபவர் செல்வம் (வயது 57), கூலித்தொழிலாளி. இவர் சின்னப்பள்ளம் பாறை செல்லும் வழியில் உள்ள ஒரு விவசாயியின் மாந்தோப்பில் உரிமையாளருக்கே தெரியாமல் சுமார் 70 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தார்.

இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சாராய ஊறலை கைப்பற்றி அங்கேயே கொட்டி அழித்தனர். இதையடுத்து செல்வத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்