ஓசூரில் மனைவியை தாக்கிய கட்டிட தொழிலாளி கைது

Update: 2023-06-11 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் சென்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜோஸ்பின் (வயது 21). இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலை பால் கேனை சுத்தம் செய்யுமாறு வடிவேல் தனது மனைவியிடம் கூறினார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் இரும்பு கம்பியால் ஜோஸ்பினை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்