ஓசூர்:
ஓசூர் ஜி.ஆர்.டி. ஜங்ஷன் அருகே அட்கோ போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, ஓசூர் திலகர் பேட்டையை சேர்ந்த முனிராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.600 மதிப்பிலான 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.