கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது

Update: 2023-05-13 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காவேரிப்பட்டணம், ஓசூர், மகராஜகடை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.565 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்