ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டியவர் கைது
ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள ராதாபுலி விளக்கில் உள்ள ஒரு டீக்கடை முன்பாக வாலிபர் ஒருவர் கையில் வாளுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தாராம். இதுகுறித்து அறிந்த சாலைக்கிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் தெற்கு வலசைகாடு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.