கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா, பான்மசாலா, பான்பராக் விற்ற சிங்காரப்பேட்டை ராமகிருஷ்ணன் (வயது 48), சாணிப்பட்டி பொன்னுசாமி (56), துரைசாமி நகர் புஷ்பா (42), சாமல்பட்டி சென்னம்மாள் (39), ஜிங்கல் கதிரம்பட்டி சென்றாயன் (45) உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.