நாமகிரிப்பேட்டை அருகே போலி டாக்டர் கைது

Update: 2023-04-16 18:45 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள்ளி ஆத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காத்த முத்து என்கிற தியாகராஜன் (வயது 48). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், ராசிபுரத்தை சேர்ந்த டாக்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு அவரது வீட்டில் ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்ததின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், நாமக்கல் மருந்து ஆய்வாளர் பிரபு, நாமகிரிப்பேட்டை சுகாதார ஆய்வாளர் பெருமாள், சித்தா உதவி டாக்டர் பூங்கொடி ஆகியோர் தியாகராஜன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தியாகராஜன் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாமகிரிப்பேட்டை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்