ஓசூர்:
ஓசூர் ரெயில் நிலையம்எதிரில் நேரு நகர் பகுதியில் ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாகவும், இளம்பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த இளம்பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஓசூர் சிவசக்தி நகர் ராயக்கோட்டை அட்கோவை சேர்ந்த கிஷோர் குமார் என்பவரின் மனைவிதனலட்சுமியை (வயது 40) போலீசார் கைது செய்தனர்.