பஸ் நிலையத்தில் திடீர் உண்ணாவிரதம்; 2 பேர் கைது

பஸ் நிலையத்தில் திடீர் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-17 18:45 GMT

காரைக்குடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையான சிலரை மீண்டும் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முகாமிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்ய கோரியும் பச்சை தமிழகம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவபட்டன், மாவட்ட செயலாளர் தமிழ் கார்த்தி ஆகியோர் திடீரென காரைக்குடி பஸ் நிலையத்தில் சாகும் வரை பட்டினி போராட்டம் அறிவித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்