தர்மபுரி:
தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தர்மபுரி டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி பஸ் நிலையம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானஅள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பவர் கஞ்சா பொட்டலங்களை பையில் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.