கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-15 18:45 GMT

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீலகண்டி ஊருணி வடக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை சோதனையிட்டபோது இருவரிடமும் தலா 150 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சூரங்கோட்டை மருதுபாண்டியன் நகரை சேர்ந்த திலீபன் (வயது 23), சிவன்கோவில் தெரு கபிலன் (22) என தெரியவந்தது. பி்ன்னர் இருவரையும் போலீசாார் கைது செய்தனர். இதேபோல, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சின்னக்கரை பாம்பூரணி பகுதியில் கஞ்சாவுடன் நின்ற பாசிப்பட்டறை தெரு நாகூர்கனி (34) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய சிவஞானபுரம் செய்யது நைனா முகம்மது உசேன் என்பவரை தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்