மருந்து விற்பனை பிரதிநிதியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

மருந்து விற்பனை பிரதிநிதியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-27 20:10 GMT

சூரமங்கலம்:

சேலம் குரங்குசாவடியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 44). மருந்து விற்பனை பிரதிநிதி. நேற்று முன்தினம் இரவு அன்புச்செல்வன் மாமாங்கம் பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவருடைய செல்போனை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற திருச்சி பாளையத்தை சேர்ந்த மிதுன் (20), கதிர் (20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்