கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Update:2023-02-03 00:15 IST

கிருஷ்ணகிரி மது விலக்கு போலீசார் அவ்வை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த அஜய் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் மது விலக்கு போலீசார் மத்திகிரி காடிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற மகபூப் (59) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்