சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-23 22:47 GMT

ஓமலூர்:

ஏற்காடு சுரக்காய்பட்டி பகுதியில் இருந்து காடையாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், செந்தில்குமார் மற்றம் போலீசார் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஏற்காடு சுரக்காய்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 49) என்பவரது மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், காடையாம்பட்டி பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் முருகனை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்