களரம்பட்டியில் கஞ்சா விற்றவர் பிடிபட்டார்

களரம்பட்டியில் கஞ்சா விற்றவர் பிடிபட்டார்.

Update: 2022-12-21 22:15 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் களரம்பட்டி, தாதகாப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று களரம்பட்டி பாண்டுரங்கன் கோவில் பகுதியில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கார்த்திகேயன் என்ற வெப்படை கார்த்திக் (வயது 30) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தரெிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்