பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1¾ லட்சம் குட்கா பொருட்களுடன் ஆம்னிபஸ் பறிமுதல்-டிரைவர் கைது

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் கடத்திய ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை ஓசூர் போலீசார் பஸ்சுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-09 19:00 GMT

ஓசூர்:

குட்கா பொருட்கள் கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் 163 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை கடத்தி மூட்டைகளில் கட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

ஆம்னி பஸ் பறிமுதல்

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சையத் என்ற நஜீம் (வயது 38), கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரிபாளையம் முதலாவது கிராசை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சில் மூட்டை, மூட்டையாக குட்காவை பஸ்சில் மறைத்து வைத்து அவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து டிரைவர் சையத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் 163 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆம்னி பஸ்சையும் போலீசார் பறிமுதல் செய்ய முடிவு செய்தனர்.

அதே நேரத்தில் அந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்ததால் அந்த பஸ்சை சென்னைக்கு இயக்க அனுமதி அளித்த போலீசார், அங்கு பயணிகளை இறக்கி விட்டு வர அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த பஸ் சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்