பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியை அடுத்த அத்திமரத்தூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 63). இவருக்கும், மஞ்சநாயக்கந்தண்டா பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி பீமன் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி முதியவர் கோவிந்தசாமி அத்திமரத்தூர் சத்யாநகரில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தசாமியை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீமனை கைது செய்தனர்.