ஓசூரில் கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

Update: 2022-11-08 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சோதனை செய்த போது, அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பனோஜ்குமார் ஜேனா (வயது 32) என்பதும், ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்