வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது;
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே நாகர்பாலி சவுரிபாளையம் ரோடு சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ேமாட்டார்சைக்கிளை திருடி சென்றார். பின்னர் பூபதி வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பூபதி தனது நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்த்தார். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து பூபதி தனது நண்பர்களுடன் மர்மநபர் சென்ற வழியாக வாகனத்தில் வேகமாக சென்று அந்த நபரை பிடித்தனர். இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் மனோஜ்பாரத் (35) என்பதும் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மனோஜ் பாரத்தை வெண்ணந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் மனோஜ் பாரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.