அனுமதியின்றி பட்டாசு விற்ற 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரெகுநாதபுரம் பகுதியில் அனுமதியின்றி பொது இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு விற்ற மொட்டையன்வலசையை சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஷ் (22), என்பவரை கைது செய்தனர்.
இதேபோல ரெகுநாதபுரம் விலக்கு ரோடு பகுதியில் பட்டாசு விற்ற மேலவலசை பாலு மகன் சந்திரசேகர் (47) என்பவரையும் கைது செய்தனர்.