50 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

50 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-23 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள மானகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக காரில் ஜெயபாரதி(வயது 28) என்பவர் 50 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்