முகநூலில் பதிவு செய்தவர் கைது
முகநூலில் பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி,
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டி அவரது நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் தருவதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுகாரன்பட்டியை சேர்ந்த இந்து மக்கள் புரட்சி படை அமைப்பை சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.