ரூ.55 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.55 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-18 20:08 GMT


மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 51). சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது மகனுக்கு ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக முனிச்சாலை பகுதியை சேர்ந்த பாலாஜி, சுரேஷ், ஞானசேகரன், ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கூறியுள்ளனர். இதனை நம்பிய விருமாண்டி, பல்வேறு தவணைகளாக ரூ.55 லட்சத்து 39 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் பண மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விருமாண்டி, மதுரை மாநகர் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்