கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது;

Update:2022-09-19 00:15 IST

குருபரப்பள்ளி:

மகராஜகடை போலீசார் சிந்தகம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற நபரை சோதனை செய்தபோது அவர் 450 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த சிந்தகம்பள்ளியை சேர்ந்த உதயகுமார் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சூளகிரி அருகே வேட்டியம்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த வீராசாமி (60) என்பவரை சூளகிரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்