புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-15 23:23 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி கேட், உழவர் சந்தை பகுதியில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்குள்ள காபி பார் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 31), கைலாஷ் (27), சுரேஷ் (23), கிருபாகரன் (28), சீனிவாசன் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்